நாளுமொரு இறைவார்த்தை

இயேசு கிறிஸ்துவின் பெயரால்
இன்று ஆம் ஆண்டு ஆம் நாள் . இறைமகன் இயேசு, இன்று உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் உறவுகளையும் நீங்கள் வாழும் நாட்டினையும் ஆசீர்வதிப்பாராக.

இன்றைய சிந்தனை

இரண்டாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 2வது வாரம் செவ்வாய்க்கிழமை
2017-01-17''இயேசு, 'ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே' என்றார்'' (லூக்கா 6:5)

ஓய்வு நாள் என்பது யூதருடைய சமய வழக்கங்களில் மிக முக்கியமான ஒன்று. வெள்ளிக் கிழமை மாலை பொழுது சாயும் வேளையிலிருந்து தொடங்கி மறுநாள் சனிக்கிழமை பொழுது சாய்வது வரை ஓய்வு நாள் அனுசரிக்கப்பட்டது. ஆறு நாள்களில் உலகைப் படைத்த கடவுள் ஏழாம் நாள் ஓய்வெடுத்தார் என்னும் விவிலியச் செய்தியின் அடிப்படையில் ஓய்வுநாள் சட்டம் விளக்கப்பட்டது. கடவுளின் படைப்பை வியந்து, நன்றியுணர்வோடு கடவுளுக்குப் புகழ்செலுத்தும் நாளாக ஓய்வுநாள் அமைந்தது. அன்றாட வேலையிலிருந்து ஓய்வெடுப்பதற்கும் அந்நாள் பொருத்தமாக இருந்தது. என்றாலும்...

இரக்கப் பணிகளைப் புதிய வழிகளில் ஆற்ற திருத்தந்தை அழைப்புஇறை இரக்கத்தின் செய்தியைத் தாங்கிச் செல்லவும், அச்செய்தியைப் பரப்புவதற்குப் புதிய வழிகளைத் தேடவும், கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். பிலிப்பீன்சின் மனிலாவில், நடைபெற்றுவரும், இரக்கம் பற்றிய நான்காவது உலக திருத்தூது மாநாட்டில் (WACOM IV) கலந்துகொள்ளும், ஆயிரக்கணக்கான மக்களுக்கு,... [2017-01-17 22:35:29]பாசமுள்ள பார்வையில்... மேதையைச் செதுக்கிய மாமேதைஒருவர் சிந்தனையில் புதியதோர் எண்ணம் உதித்தது என்பதைச் சொல்வதற்கு, ஒரு மின்விளக்கு 'பளிச்'சென்று எரிவதுபோன்ற அடையாளத்தைப் பயன்படுத்துவோம். அந்த மின்விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் எடிசனின் குழந்தைப் பருவத்தில், அதிகம் ஒளி வீசவில்லை என்பதை அறிவோம். சிறுவன் தாமஸ் ஒரு... [2017-01-17 22:22:40]துணையின்றி குடிபெயரும் சிறார் ஆபத்தில் உள்ளனர்இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட உலக குடியேற்றதாரர் தினம் குறித்து தன் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடிபெயர்வோருள், துணையின்றி குடிபெயரும் சிறார்கள் குறித்த தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார். நம் சகோதரர்களாகிய சிறார் குடியேற்றதார்கள், துணையின்றி... [2017-01-17 22:15:34]

திரு . ஜே. ஹென்றி ரெத்னராஜா அவர்களின் தொகுப்பில் உருவான "இலங்கையின் முதல் புனிதர் தூய ஜோசப்வாஸ்"திரு . ஜே. ஹென்றி ரெத்னராஜா அவர்களின் தொகுப்பில் உருவான "இலங்கையின் முதல் புனிதர் தூய ஜோசப்வாஸ்"என்னும் வரலாற்று நூல் 15.01.2017 அன்று தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலயத்தில் வெளியிடப்பட்டது. இதன் முதல் பிரதியானது பங்குத்தந்தை அருட்தந்தை.ஜி.அலக்ஸ் றொபட்... [2017-01-15 13:49:46]இன்று இலங்கை வாழ் அமலமரித் தியாகிகள் சபையினர் (யாழ் மாகாணம்) அனைவருக்கும் ஒரு உன்னதமான நாள்இன்று இலங்கை வாழ் அமலமரித் தியாகிகள் சபையினர் (யாழ் மாகாணம்) அனைவருக்கும் ஒரு உன்னதமான நாள், எல்லாம் வல்ல இறைவன் அருளால், அமலமரித் தியாகிகள் சபையைச் சேர்ந்த திருத்தொண்டர். கீதபொன்கலன் பீ ட் சுஜாகரன் அமதி அவர்கள்... [2017-01-15 13:47:26]

அனைத்து மத விழாக்களையும் ஒரே நாளில் கொண்டாடிய வாரணாசிஇந்துக்களின் புனித நகரான வாரணாசியில் ஒன்று கூடிய இந்து, இஸ்லாம், சீக்கிய, ஜெயின் மற்றும் கிறிஸ்தவப் பிரதிநிதிகள், தங்கள் மத விழாக்களை ஒன்று கூடி ஒரே நாளில் சிறப்பித்து, வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இயேசுவின் பிறப்பையும், மிலாடி நபியையும், 10வது சீக்கிய... [2016-12-26 20:01:13]தெலுங்கானா மாநிலத்தில் கிறிஸ்தவ பவன்தெலுங்கானா மாநில அரசு, விஜயவாடா நகரில் ஏற்பாடு செய்த கிறிஸ்மஸ் பெருவிழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய, அம்மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் அவர்கள், ஆலயங்கள் தாக்கப்படுவதையும், அவை அவமரியாதை செய்யப்படுவதையும், இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதாக, உறுதியளித்தார்.

தெலுங்கானா மாநில அரசு, சமயச்... [2016-12-26 19:53:06]

அன்பு அவனியில் அவதாரமான அன்பின் பெருவிழா '' கிறிஸ்மஸ்''காலநிலை, வானிலை மாற்றங்களும் நத்தாருக்காக தம்மை ஆயத்தப்படுத்தும். சில்லென்ற குளிர் காற்று இதமாக வீச ஆரம்பிக்கும். முன் பனி, பின் பனி என பனித்தூறல் புற்தரைகளை நனைத்து நிற்கும். மரஞ்செடி கொடிகள் யாவும் பசுமையாக துளிர் விட்டு பச்சைப்பசேல் என காட்சியளிக்கும். மரஞ்செடி கொடிகளுக்கு எப்படியடா தெரியும், கிறிஸ்து பிறப்பு காலம் வரப்போகுது என்று என சிலவேளைகளில் நான் சிந்திப்பதுண்டு. ஆம், அவைகளும் இறைவனின் படைப்புக்கள் தானே, இவைகள் இறைவனின் எல்லையற்ற அன்பின் பரிணாமங்கள் [2016-09-28 23:06:33]

எழுத்துருவாக்கம்:சகோ. அ. அன்ரன் ஞானராஜ் றெவல் SDBபாவசங்கீர்த்தனம் தேவைதானாநம் இயேசு ஆண்டவர் காணாமல் போன ஆடு உவமையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார். "மனந்திரும்பத் தேவையில்லாத தொண்ணுற்றொன்பது நீதிமான்களைக் குறித்து வானத்தில் உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனந்திரும்பும் ஒரு பாவியைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." அதுமட்டுமல்ல தனது பகிரங்கப்பணி வாழ்வின் போது இயேசுக்கிறிஸ்து பலருக்கு மன்னிப்பு அளித்து மறுவாழ்வு அளித்திருக்கின்றார். இயேசு விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை மன்னித்தார், திமிர்வாதக்காரனுக்கு மன்னிப்பு வழங்கி குணமாக்கினார். [2016-09-28 23:06:33]

எழுத்துருவாக்கம்:சகோ. அ. அன்ரன் ஞானராஜ் றெவல் SDB

குழந்தை இயேசு


2017-01-17

கத்தோலிக்க திருச்சபையில் பல நாடுகளில் பல காலபகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள், திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள், மறையுரைகள், எனைய வழிபாடுகள் சம்மந்தமான காணொளித் தொகுப்புகள் இங்கே பிரசுரமாகும். ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையாக; உங்கள் ஆசீர்வாதத்திற்காகத் தொகுக்கப்படுகின்றது.

ஏக்கம்


2017-01-17

வேதாகமத்தினை சித்தரிக்கும் திரைப்படங்கள், புனிதர்களின் வரலாறுகள், திருச்சபையின் வரலாற்றை மையப்படுத்திய திரைக்கதைகள், சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் திரைப்படங்கள், குறும்படங்கள், நல்வழிகாட்டும் கிறிஸ்தவ திரைப்படங்கள் இங்கே பிரசுரமாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திரைப்படமாக; ஆண்டவர் இயேசுவின் பரிசுத்த நாமத்தின் மகிமைக்காக; உங்கள் ஆன்மீக நலங்களுக்காக தொகுக்கப்படுகின்றது.
பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje) என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 6 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள். திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும் தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம், எமது பணியகத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.

02.01.2017 அன்று மரியன்னை மரிஜானாவுக்கு வழங்கிய செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே, எனது மகன் இந்த உலகில் இருந்த போது, உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் அன்பாகவும் ஒளியாகவும் இருந்தார். என் அன்பார்ந்த அப்போஸ்தலர்களே, அவரது ஒளியைப் பின் பெற்றுங்கள். இது இலகுவானது அல்ல. நீங்கள் தாழ்ச்சி உள்ளவர்களாக இருக்க வேண்டும். இயேசுவின் அன்பினாலும் உங்கள் விசுவாசத்தினாலும் நீங்கள் உங்களை மற்றவர்களிலும் பார்க்க தாழ்த்த வேண்டும். விசுவாசம் இன்றி எவரும் தெய்வீக அனுபவங்களை பெறமுடியாது. நான் உங்களோடு இருக்கின்றேன்,...
25-12-2016 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

என் அன்பார்ந்த பிள்ளைகளே, மிகுந்த மகிழ்ச்சியோடு எனது மகனை சுமந்தபடி அவரது சமாதானத்தை உங்களுக்கு தருவதற்காக வருகின்றேன். உங்களுடைய இருதயத்தை அவரது சமாதானத்திற்க்காக திறவுங்கள். மிகுந்த மகிழ்ச்சியோடு நீங்கள் அதைப்பெற்றுக் கொள்வீர்கள். உங்களிலும் உங்கள் குடும்பங்களிலும் சமாதானத்தை தருவதற்காக விண்ணகம் விளைகின்றது. உங்களின் செபத்தினால் இந்த சமாதானத்தை பெற்று கொள்வீர்கள். உங்களுடைய நம்பிக்கையை இழந்து விடாதீர்கள் என, எனது மகனுடன் உங்களை அசீர்வதிக்கின்றேன். உங்களுடைய உள்ளம் தளராத உள்ளத்தோடு எப்போதும் பரலோகத்தை...
2016-12-02 அன்று அன்னை மரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! எனது பிள்ளைகள் நடந்து கொள்ளும் விதத்தை நான் பார்க்கும்போது, எனது தாய்மைக்குரிய இதயம் அழுகின்றது. பாவங்கள் அதிகரிக்கின்றன, தூய்மையான ஆன்மா எப்பொழுதும் முக்கியமானது என்பதுடன் எனது மகனை பலர் மறந்து விடுகின்றனர், பலவேளைகளில் அவரை மதிப்பது குறைவடைகின்றது, எனது பிள்ளைகள் தண்டிக்கப்படுகின்றனர். ஆகவே நீங்கள், எனது பிள்ளைகளே, எனது அன்பின் சீடர்களே, எனது மகனின் பெயரால் இதயத்தாலும் ஆன்மாவாலும் அழைக்கிறேன். அவரே ஒளியின் வார்த்தைகளாக உங்களுக்கு இருப்பார்....


திருவெளிப்பாட்டு ஆண்டு 2016/2017

27/11/2016-26/11/2017


மின்னஞ்சல் குழுமம்

ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை கீழே பதிவு செய்யவும்.

உங்கள் Email முகவரி

ETR வானொலியில் யேர்மன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் வானொலி நிகழ்வு

தினமும் காலை 7:45மணி முதல் 8:05 மணி வரை

இவ் நாளந்த நற்சிந்தனை எமது இணையத்தில் நாள்தோறும் காலை 8.30 மணி முதல் மறு நாள் காலை 8.30 மணி வரை உங்கள் ஆசீர்வாத்ததிற்காக ஒலிபரப்பாகின்றது. கேட்டு பயனடையுங்கள், மற்றவர்களுக்கும் அறிவியுங்கள்.

பயனடைந்தோர்

counts
தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடை யெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள். (திருத்தூதர் பணி 1:8) உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறை சாற்றுங்கள். (மாற்கு 16:15)

புனித கன்னி மரியாள்

இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்
(யோவான் 2:5)

இறைவாக்குத்தத்தம்

உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
(யோவான் 16:20)

இறைசித்தம்

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)

திருத்தந்தை

பிரான்சிஸ்

இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்
(மத்தேயு 16:18)

பரிசுத்த ஆவி

நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்: உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்: உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்
(யோவேல் 2:28)

பரிசுத்த ஆவி

ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு-இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்.
(எசாயா 11:2)

இறைவாக்குத்தத்தம்

எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன்: என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.
(நீதிமொழிகள் 8:17)

நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்:
அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.
(எசாயா 53:5)

தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.
(யோவான் 3:16)

ஆவியின் அருட்கொடைகள்

தூய ஆவியார் ஞானம் நிறைந்த சொல்வளம், அறிவுசெறிந்த சொல்வளம், நம்பிக்கை, பிணிதீர்க்கும் அருள் கொடை, வல்ல செயல் செய்யும் ஆற்றல், இறைவாக்குரைக்கும் ஆற்றல், ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றல், பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றல், அப்பேச்சை விளக்கும் ஆற்றல் ஆகியவற்றை அருளுகிறார்.
(1கொரிந்தியர் 12:8-10)